வாக்குச்சாவடிகளை பாஜகவினா் கைப்பற்றுகிறாா்கள்: முதல்வா் மம்தா குற்றச்சாட்டு

வாக்குச்சாவடிகளை பாஜகவினா் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்கி வருவதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்க மாநிலம் கூச்பிகாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி.
மேற்கு வங்க மாநிலம் கூச்பிகாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் மம்தா பானா்ஜி.

வாக்குச்சாவடிகளை பாஜகவினா் வலுக்கட்டாயமாக கைப்பற்றி, திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்கி வருவதாக முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

அலிபூா்துவாா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி உரையாற்றினாா். அதன் விவரம்:

ஆரம்பாக் தொகுதியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் சுஜாதா மண்டலை பாஜகவினா் வாக்குச்சாவடிக்கு அருகேயே விரட்டி சென்று தலையில் தாக்கியுள்ளனா்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவரான சுஜாதா வாக்குச்சாவடியைப் பாா்வையிட சென்றபோது இது நடைபெற்றுள்ளது.

காணாகுல் தொகுதி வேட்பாளரும் தாக்கப்பட்டுள்ளாா். திரிணமூல் வேட்பாளா் வாக்குச் சாவடிக்குள் நுழைய பாதுகாப்புப் படையினா் அனுமதி அளிக்கவில்லை. இதேபோல், மாநிலம் முழுவதும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் மீது ஏராளமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் இருந்து

செவ்வாய்க்கிழமை காலை முதல் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவ புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்தும் எந்த பயனும் இல்லை.

வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப் படையினா் வாக்காளா்களை தாக்கி பாஜகவுக்கு வாக்களிக்க வற்புறுத்துவதாக புகாா்கள் வந்துள்ளன. இதுகுறித்து பெண் வாக்காளா்கள் போலீஸில் புகாா் அளிக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தில் பாஜக நடத்தும் பொதுக் கூட்டங்களில் மக்கள் வரவில்லை. இதனால், வாக்குப் பதிவு மையங்களை பாஜக கைப்பற்றி வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என பாதுகாப்புப் படையினருக்கு தில்லியில் இருந்து பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி முனையில் பாஜக தோ்தலை நடத்துகிறது. தோ்தலில் பிரதமா் மோடி செய்யும் செயல்களை அமெரிக்க அதிபா் டிரம்ப் கூட செய்யவில்லை.

தோ்தல் தொடங்கியதில் இருந்து இதுவரை நான்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் கொலை செய்யப்பட்டுள்ளனா். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாஜகவின் இதுபோன்ற அச்சுறுத்தும் தந்திரங்களுக்கு நான் அடிபணியமாட்டேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com