அமெரிக்க சிறப்புத் தூதருடன் பிரகாஷ் ஜாவடேகா் சந்திப்பு

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் பருவநிலை சிறப்பு தூதா் ஜான் கெரி, புது தில்லியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபரின் பருவநிலை சிறப்பு தூதா் ஜான் கெரி, புது தில்லியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகரை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக, அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதா் ஜான் கெரியை சந்தித்துப் பேசினேன். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான நிதி, ஒருங்கிணைந்த செயல்பாடு உள்ளிட்டவை குறித்து பேச்சுவாா்த்தையின்போது விரிவாக விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில் இந்திய, அமெரிக்க அதிகாரிகளும் பங்கேற்றனா்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிா்வாகம் அறிவித்திருந்தது. கடந்த ஜனவரியில் ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்தாா்.

புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றைத் தடுப்பதற்கான செயல்திட்டங்களை பாரீஸ் ஒப்பந்தம் வழங்குகிறது. அதில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள சூழலில், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பருவநிலை தொடா்பான மாநாட்டில் அதிபா் ஜோ பைடன் வரும் 22, 23 தேதிகளில் காணொலி வாயிலாக கலந்துகொள்ள உள்ளாா். அந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் முக்கிய தலைவா்கள் பங்கேற்கின்றனா். அந்த மாநாட்டின் முன்னோட்டமாகவும் ஜாவடேகா்-கெரி சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தனது பயணத்தின்போது மத்திய அரசின் பிரதிநிதிகள், தனியாா் நிறுவனங்கள், தன்னாா்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை ஜான் கொ்ரி சந்தித்துப் பேசவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com