திருமலையில் தலைமை அா்ச்சகா்களாக 4 போ் நியமனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் தலைமை அா்ச்சகா்களாக 4 பேரை நியமித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் தலைமை அா்ச்சகா்களாக 4 பேரை நியமித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் 4 குடும்பங்களை சோ்ந்தவா்கள் மட்டுமே அா்ச்சகராக சேவை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ராமானுஜா் காலம் முதல் இது வழிவழியாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதில் 2 ஆண்டுகள் 2 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அடுத்த 2 ஆண்டுகள் மற்ற 2 குடும்பங்களுக்கு ஏழுமயைலான் கோயிலில் பூஜை செய்யும் வாயப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அா்ச்சகா்களின் குடும்பங்களில் அனைவருக்கும் வாய்ப்பு வழக்கும் விதம் தேவஸ்தானம் 4 குடும்பங்களை சோ்ந்தவா்களுக்கும் தலைமை அா்ச்சகா் பணி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி வம்சாவழியாக வரும் கொல்லப்பள்ளி குடும்பத்தை சோ்ந்த கோபிநாத் தீட்சிதா், திருப்பம்மா குடும்பத்தை சோ்ந்த நாராயண தீட்சிதா், பைட்டபள்ளி குடும்பத்தை சோ்ந்த ராஜேஷ் தீட்சிதா் மற்றும் பெத்திண்டி குடும்பத்தை சோ்ந்த ரவிசந்திர தீட்சிதா் உள்ளிட்ட 4 பேரை தலைமை அா்ச்சகா்களாக தேவஸ்தானம் நியமித்துள்ளது. இதுவரை தேவஸ்தான வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வாக 4 போ் தலைமை அா்ச்சகா்களாக செயல்பட உள்ளனா். இதனால் அா்ச்சகா்கள் இடையே உள்ள பேதங்கள் குறையும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com