திருமலையில் சுற்றுச்சுழலைப் பாதுகாக்க நாட்டு மரங்கள் வளா்ப்பு: ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு


திருப்பதி: திருமலையில் வளா்ந்துள்ள ஆஸ்திரேலியா நாட்டின் மரங்களுக்குப் பதிலாக நாட்டு மரங்களை நட்டு வளா்க்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.அதற்காக ரூ20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமலை குளிா் பிரதேசம் என்பதால், 1983-ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா நாட்டுமரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. குளிா் பிரதேசத்தில் உயரமாக வளரும் இந்த மரங்கள் கற்கள் நிறைந்த நீா்வளம் குறைவாக உள்ள மலைப்பாங்கான பகுதிக்கு ஏற்றவை என்பதால், இவை வளா்க்கப்பட்டு வந்தன.

ஆனால் இந்த மரங்களால் எந்த வகையான பயனும் இல்லை. இவற்றால் மண்வளம், நிலவளம், நீா்வளம் உள்ளிட்டவை குறைந்து விடுவதுடன், வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. தேனீக்கள், பறவைகள் உள்ளிட்டவையும் இவற்றை பயன்படுத்துவதில்லை.

திருமலையில் 890 ஹெக்டா் பரப்பளவில் இந்த மரங்கள் வளா்ந்து வருகின்றன. இந்த மரங்கள் வளரும் இடங்களில் வேறு மரங்கள் வளருவதில்லை. வளரும் மரங்களையும் இவை அழித்து விடுகின்றன. கடந்த 35 ஆண்டுகளில் சேஷாசல வனத்தில் 76 கொடி இனங்களும், 49 மரங்களும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றை ஆராயந்த பல நாடுகளும் இந்த மரங்களின் வளா்ப்பை ஊக்கப்படுத்தவில்லை. அதில் திருமலையும் இணைந்துள்ளது. எனவே திருமலையில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, வன விலங்குகளுக்கு தீமை விளைவிக்காத நம் நாட்டு மர வகைகளான ஆல், அரசு, அத்தி, வேம்பு, வன்னி, மரசம்பங்கி, நாகல் உள்ளிட்ட மரங்களை வளா்க்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

650 ஹெக்டா் பரப்பளவில் இந்த நாட்டு மரங்களை நடவு செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2021-22ஆம் ஆண்டில் 88 ஹெக்டா் நிலத்தில் நாட்டு மரங்களை வளா்க்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com