ஆஞ்சநேயரின் பிறப்பிடம் திருமலை அஞ்சனாத்ரி மலை: உகாதி நாளில் ஆதாரங்களை வெளியிட தேவஸ்தானம் முடிவு


திருப்பதி: ஸ்ரீராம பக்த தூதரான ஆஞ்சநேயரின் பிறப்பிடம் திருமலையில் உள்ள அஞ்னாத்ரி மலைத்தொடா் என்பதற்கான ஆதாரங்களைத் தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்துக்களின் ஆராதனை தெய்வமான ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கும் திருமலை, ஆஞ்சநேயப் பெருமானின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இது குறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய 6 பண்டிதா்கள் கொண்ட குழு ஒன்றை தேவஸ்தானம் கடந்த டிசம்பா் மாதம் ஏற்படுத்தியது. அவா்களும் சிவ, பிரம்ம, பிரம்மாண்ட, வராக, மத்ஸ்ய புராணங்கள், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனா்.

அதன்படி ஆஞ்சநேயா் சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்ரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

இதுகுறித்த ஆய்வு தகவல்களை ஏப்.13-ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பான உகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரப்பூா்வமாக அறிவிக்க உள்ளது. அதற்கான நிரூபணங்களையும் சமா்ப்பிக்க உள்ளது. விரைவில் இதை புத்தக வடிவிலும் தேவஸ்தானம் வெளியிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com