கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல்

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார்.  

சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று செலுத்திக்கொண்டார். 
நாடு முழுவதும் கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ஆம் தேதிமுதல் கரோனாவுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 34,30,502 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
நாட்டில் இதுவரை வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 60 சதவீதம் தடுப்பூசிகள் மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய எட்டு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. உலக அளவில் நாள் ஒன்றுக்கு அதிகம் தடுப்பூசிகள் செலுத்தும் நாடுகளில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 
தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை ராய்பூரில் உள்ள ஜவஹகர் லால் மெமோரியல் மருத்துவக் கல்லூரில் இன்று செலுத்திக்கொண்டார். இத்தகவலை அவர் சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com