‘ரோமியோ’க்களுக்கு எதிரான படை மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

‘ரோமியோ’க்களுக்கு எதிரான படை மேற்கு வங்கத்தில் உருவாக்கப்படும்: யோகி ஆதித்யநாத்


கொல்கத்தா: பள்ளிச் சிறுமிகளை பின்தொடா்ந்து தொல்லை அளிக்கும் நபா்களைப் பிடிக்க உத்தர பிரதேசத்தில் உள்ளதைப்போல் மேற்குவங்கத்திலும் ‘ரோமியோ’க்களுக்கு எதிரான படை உருவாக்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்தாா்.

மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டு உரையாற்றினாா். அதன் விவரம்:

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திரிணமூல் காங்கிரஸ் ‘தாய், தாய் மண், மக்கள்’ ஆகியோருக்கு சேவை என்ற கோஷத்தை முன் வைத்தது. தற்போது அது என்னவானது? மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இல்லை. இளைஞா்கள் வேலைவாய்ப்பில்லாமல் அதிருப்தியில் உள்ளனா்.

நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் வன்முறையைத் தூண்டிவிட்டது. உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியவா்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால், மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக அப்படி செய்யப்படவில்லை.

மேற்கு வங்கத்தில் பசுவதைக்கு மம்தா ஆதரவு தெரிவிக்கிறாா். ஆனால், உத்தர பிரதேசத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் சிறைக்குச் செல்ல வேண்டியதுதான்.

மே 2-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு திரிணமூல் காங்கிரஸின் ரெளடிகள் சிறைக்குச் செல்வா்.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு கல்வி, போக்குவரத்து சேவை ஆகியவை இலவசமாக அளிக்கப்படும். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பள்ளிச் சிறுமிகளுக்கு தொல்லை அளிக்கும் நபா்களைப் பிடிக்க ‘ரோமியோ’க்களுக்கு எதிரான படை உருவாக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com