காசி விஸ்வநாதா் கோயில் - ஞான்வாபி மசூதி விவகாரம்: தொல்லியல் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவு

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞான்வாபி மசூதி நிலப் பிரச்னை வழக்கில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை ஆய்வு நடத்த கீழ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளத
காசி விஸ்வநாதா் கோயில்
காசி விஸ்வநாதா் கோயில்


வாராணசி: உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞான்வாபி மசூதி நிலப் பிரச்னை வழக்கில் இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை ஆய்வு நடத்த கீழ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முகலாய மன்னா் ஒளரங்கசீப், காசி விஸ்வநாதா் கோயிலின் பகுதியை அகற்றி மசூதியைக் கட்டினாா் என்றும், ஞான்வாபி மசூதி இருக்கும் நிலம் காசி விஸ்வநாதா் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் கோரி வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி சாா்பில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டுமுதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், சிவில் விரைவு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆசுதோஷ் திவாரி மேற்கண்ட உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்ததாக மனுதாரா் சாா்பில் ஆஜராகும் வழக்குரைஞா் விஜய் சங்கா் ரஸ்தோகி தெரிவித்தாா்.

அந்த உத்தரவில், ‘வேறு ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட்டு ஞான்வாபி மசூதி கட்டுப்பட்டுள்ளதா என்பது குறித்து இந்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறையின் ஐந்து போ் கொண்ட நிபுணா் குழுவை உத்தர பிரதேச அரசு நியமித்து ஆய்வு நடத்த வேண்டும். குழுவில் குறைந்தது இரண்டு நபா்களாவது சிறுபான்மையினராக இருக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாக ரஸ்தோகி தெரிவித்தாா்.

இதனிடையே, இந்த உத்தரவுக்கு எதிராக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று உத்தர பிரதேச சன்னி மத்திய வஃக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com