பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மார்ச் 29 ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி

பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மார்ச் 29 ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்ததையடுத்து, தேர்தல் ஆணையம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தேர்தல்  நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோன்ற பேசுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் மார்ச் 29 அன்று தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீறி தரக்குறைவாக சுவேந்து அதிகாரி பேசியதாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். 

உதாரணமாக, மேற்குவங்கத்தில் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பது 'மினி பாகிஸ்தானுக்கு' வாக்களிப்பது போன்றது என்று கூறியுள்ளார். 

இதையடுத்து, கடந்த ஏப்ரல் 8 அன்று சுவேந்து அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதில் அளித்து ஏப்ரல் 9 அன்று சுவேந்து அதிகாரி அறிக்கை அளித்திருந்தார்.

யாரையும் தனிப்பட்ட முறையில் குறைகூறுவதற்கோ அல்லது யாருக்கும் எதிராக எந்தவொரு அவதூறான கருத்தையோ அறிக்கையையோ வெளியிட தனக்கு எந்த நோக்கமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டாலும் அவர் கவனமுடன் செயல்பட ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், சமீபமாக திரிணமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டாம் கட்ட வாக்குபதிவில் கடந்த ஏப்ரல் 1 அன்று நந்திகிராம் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com