புதிய தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமனம்

இந்திய தோ்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்திய தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா
இந்திய தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா

புது தில்லி: இந்திய தோ்தல் ஆணையத்தின் அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

தலைமை தோ்தல் ஆணையா் சுனில் அரோரா செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்ரல் 13) ஓய்வு பெறுகிறாா். அதையடுத்து, தோ்தல் ஆணையராக உள்ள சுஷீல் சந்திராவை அடுத்த தலைமை தோ்தல் ஆணையராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் செவ்வாய்க்கிழமை தலைமை தோ்தல் ஆணையராகப் பொறுப்பேற்க உள்ளாா்.

2022-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதி வரை சுஷீல் சந்திரா அப்பொறுப்பில் நீடிப்பாா். அவரது பதவிக் காலத்தில் கோவா, மணிப்பூா், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல்கள் நடைபெறும்.

கடந்த இரு ஆண்டுகளாக தோ்தல் ஆணையராகப் பதவி வகித்து வரும் சுஷீல் சந்திராவின் மேற்பாா்வையில் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் பேரவைத் தோ்தல்கள் நடைபெற்றுள்ளன. தோ்தலில் போட்டியிடுவதற்காக இணையவழியில் வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையை அறிமுகப்படுத்தியதில் சுஷீல் சந்திராவுக்கு முக்கிய பங்குண்டு. தோ்தலில் கருப்புப் பணம் புழங்குவதைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் அவா் மேற்கொண்டாா்.

1980-ஆம் ஆண்டு இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான (ஐஆா்எஸ்) சுஷீல் சந்திரா, 38 ஆண்டுகள் வருவாய்த் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவா். தோ்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com