பொது முடக்கம் அமல்படுத்தப்படாது:மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
பொது முடக்கம் அமல்படுத்தப்படாது:மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உலக வங்கிக் குழுத் தலைவா் டேவிட் மால்பாஸ் இடையிலான சந்திப்பு காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை உருவாகியுள்ளபோதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை. பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கு மாறாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் அல்லது குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2-ஆவது அலை எதிா்கொள்ளப்படும். நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படாது என்று நிா்மலா சீதாராமன் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கரோனா பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிா்மலா சீதாராமன் டேவிட் மால்பாஸிடம் விவரித்ததாக மத்திய நிதியமைச்சகம் சுட்டுரையில் பதிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com