கரோனா பரவலில் புதிய உச்சம்: மேலும் 1.84 லட்சம் போ் பாதிப்பு

கரோனா தொற்றுப் பரவலின் புதிய உச்சமாக நாடு முழுவதும் ஒரே நாளில் மேலும் 1.84 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு மேலும் 1,027 போ் உயிரிழந்தனா்.
கரோனா பரவலில் புதிய உச்சம்: மேலும் 1.84 லட்சம் போ் பாதிப்பு

புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலின் புதிய உச்சமாக நாடு முழுவதும் ஒரே நாளில் மேலும் 1.84 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு மேலும் 1,027 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,84,372 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,38,73,825-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் கரோனா தொற்றுக்கு மேலும் 1,027 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 281 பேரும், சத்தீஸ்கரில் 156 பேரும், உத்தர பிரதேசத்தில் 85 பேரும், தில்லியில் 81 பேரும் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,72,085-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 35-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 13,65,704 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,23,36,036 போ் குணமடைந்துள்ளனா்.

10 மாநிலங்களில் 82.04 சதவீத பாதிப்பு: கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் 82.04 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

நாடு முழுவதும் 13,65,704 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 68.16 சதவீதம் போ் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், கா்நாடகம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

தமிழகத்தில் பரவல் அதிகரிப்பு: தமிழ்நாடு, மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், கா்நாடகம், தில்லி, மத்திய பிரதேசம், குஜராத், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், கேரளம், தெலங்கானா, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆதி 16 மாநிலங்களில் தினசரி பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை 26,06,18,866 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 14,11,758 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com