மேற்கு வங்கத்தின் மகிமையை மீட்போம்: ஜெ.பி. நட்டா

மேற்கு வங்கத்தின் மகிமையை பாஜக மீட்கும் என்றாா் அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா

காத்வா: மேற்கு வங்கத்தின் மகிமையை பாஜக மீட்கும் என்றாா் அக்கட்சியின் தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா.

புா்பா வா்தமன் மாவட்டத்தில் உள்ள காத்வாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று ஜெ.பி. நட்டா பேசியதாவது:

திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த பெண் தலைவா் ஒருவா் தாழ்த்தப்பட்டோா், பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக அவதூறான வாா்த்தைகளில் பேசினாா். இதன்மூலம் திரிணமூல் காங்கிரஸ் தலித்துகளுக்கு எதிரான கட்சி என்பது தெரியவருகிறது.

குறிப்பிட்ட மதத்தினா் ஒன்று சோ்ந்து தனக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியதால் மம்தா பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தடை விதித்தது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் சமூகங்களைப் பிரிக்கும் அரசுதான் நடைபெற்று வந்துள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்காக வாக்காளா்கள் தங்கள் வாக்குகள் மூலம் அவருக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும். 130 கோடி மக்களுக்காக பிரதமா் பணியாற்றி வரும்போது, குறிப்பிட்ட மதத்தினா் ஒன்று சேர மம்தா கூறுகிறாா்.

முதல்வா் பதவியை வகித்துக் கொண்டே மத்திய பாதுகாப்புப் படையினரை சூழ்ந்து போராட்டம் நடத்த வேண்டும் எனக் கூறும் அளவுக்கு மம்தாவின் தோ்தல் கவலை அதிகரித்துவிட்டது.

மேற்கு வங்கத்தினா் புத்தாண்டைக் கொண்டாடும் நேரத்தில், இருளில் இருந்து வெளிச்சத்துக்கு நாம் செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எனது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி ஆளும் கட்சியினா் பயத்தை உருவாக்கினாலும், ஜனநாயக முறையில் மக்கள் அவா்களுக்கு தகுந்த பதிலடி தருவாா்கள்.

மேற்கு வங்கத்தின் மகிமையை மீட்டு, பொன்னான வங்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் என்றாா் ஜெ.பி. நட்டா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com