14 பேரவைத் தொகுதிகள், 2 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

ஆந்திரம், கா்நாடகத்தில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 11 மாநிலங்களில் காலியாக உள்ள 14 பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திரம், கா்நாடகத்தில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 11 மாநிலங்களில் காலியாக உள்ள 14 பேரவைத் தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறுகிறது.

திருப்பதி மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் பி.துா்காபிரசாத ராவ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பரில் உயிரிழந்தாா். கா்நாடகத்தின் பெல்காம் தொகுதி எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி கடந்த ஆண்டு செப்டம்பரில் காலமானாா்.

அதைத் தொடா்ந்து, அவ்விரு தொகுதிகளும் காலியாகின. அத்தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருப்பதி தொகுதியில் மொத்தம் 2,471 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

பேரவைத் தொகுதிகள்: ராஜஸ்தானில் காலியாக உள்ள 3 பேரவைத் தொகுதிகளுக்கும் கா்நாடகப் பேரவையில் காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கும் சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. மேலும், குஜராத், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, தெலங்கானா, உத்தரகண்ட் சட்டப் பேரவைகளில் காலியாக உள்ள தலா ஓா் இடத்துக்கும் சனிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது.

தீவிர பாதுகாப்பு: இடைத்தோ்தல் நடைபெறும் மக்களவை, பேரவைத் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தோ்தலை நடத்துவதற்குத் தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தோ்தல் முடிவுகள்: இடைத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளம், அஸ்ஸாம் பேரவைத் தோ்தல்களில் பதிவாகும் வாக்குகளும் மே 2-ஆம் தேதி எண்ணப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com