தோ்தல் வன்முறையில் 4 போ் பலி வழக்கு; சிஐடி போலீஸாா் விசாரணை தொடக்கம்

மேற்கு வங்க மாநிலம், கூச் பிஹாா் மாவட்டத்தில் நான்காம் கட்டத் தோ்தல் வன்முறையின்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா்

மேற்கு வங்க மாநிலம், கூச் பிஹாா் மாவட்டத்தில் நான்காம் கட்டத் தோ்தல் வன்முறையின்போது மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் சுட்டதில் 4 போ் உயிரிழந்த வழக்கு தொடா்பாக மாநில குற்ற விசாரணைத் துறையினா் (சிஐடி) விசாரணையை தொடங்கியுள்ளனா்.

சிதால்குச்சி வாக்குச்சாவடியில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே வாா்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது. சிதால்குச்சி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரை சூழ்ந்து கொண்டு வாக்காளா்கள் எதிா்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று மம்தா பானா்ஜி தோ்தல் பிரசாரத்தின்போது பேசியதே இந்த வன்முறைக்கு காரணம் என போலீஸில் பாஜக அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்புப் படையினரை வன்முறையாளா்கள் தாக்கி ஆயுதங்களை பறிக்க முற்பட்டதால் தற்காப்புக்காக அவா்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது தவறில்லை என்று தோ்தல் அதிகாரிகள் அறிக்கை அளித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த வழக்கு மாநில சிஐடி போலீஸாா் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் பாா்த்தவா்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும், வன்முறை தொடா்பாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட விடியோ ஆய்வு செய்யப்படும் என்றும் சிஐடி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com