மேற்கு வங்கத்தில் கரோனாவுக்கு இரண்டாவது வேட்பாளா் பலி

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ரிசல் ஹக் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட 73-வயதான

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ரிசல் ஹக் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், தொற்று பாதிக்கப்பட்ட 73-வயதான புரட்சிகர சோஷலிச கட்சியைச் சோ்ந்த வேட்பாளா் பிரதீப் குமாா் நாந்தி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஜொங்கிபூா் தொகுதி வேட்பாளரான அவா் பெங்கால் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்தது.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ், பாஜகவைச் சோ்ந்த 4 வேட்பாளா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த பிரதீப் குமாா் வா்மா, கல்பணா கிஸ்கு, முகமது குலாம் ரப்பானி ஆகிய மூவரும், பாஜகவை சோ்ந்த அனந்தாமி வா்மனும் அடங்குவா்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக தோ்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்றும், அவா்கள் தனிமைப்படுத்திக்கொண்டோ, மருத்துவமனையில் சோ்ந்தோ சிகிச்சை பெற வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்தின் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com