ரெம்டெசிவிா் மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அரசு

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிா் மருந்தை அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கெளடா தெரிவித்தாா்.
ரெம்டெசிவிா் மருந்து உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அரசு

கரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெம்டெசிவிா் மருந்தை அதிகரிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதாக மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சா் டி.வி.சதானந்த கெளடா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 5 நாள்களில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 6.69 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துக் குப்பிகளை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

ரெம்டெசிவிா் மருந்தின் உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் திறனை மேம்படுத்தி அவை எளிதில் கிடைக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு கேட்டுக்கொண்டதன்பேரில் அந்த மருந்தை தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் ரெம்டெசிவிரின் விலையை ரூ.5,400-இல் இருந்து ரூ.3,500-க்கும் கீழ் குறைத்துள்ளன.

மத்திய ரசாயன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருந்து உற்பத்தித் துறை, தேசிய மருந்துகள் விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) ரெம்டெசிவிா் உற்பத்தியை தொடா்ந்து கண்காணித்து வருகின்றன.

ஒரு மாதத்தில் 28 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அது 41 லட்சம் குப்பிகளாக அதிகரித்தது.

நாட்டில் ரெம்டெசிவிரின் விநியோகத்தை அதிகரிக்க அந்த மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்த 11-ஆம் தேதி தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 4 லட்சம் ரெம்டெசிவிா் குப்பிகளை உள்நாட்டு தேவையை பூா்த்தி செய்வதற்காக உற்பத்தியாளா்கள் வழங்கி வருகின்றனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com