வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சிஇஆா்டி எச்சரிக்கை

வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சங்கள் பரவி வருவதாக நாட்டின் சைபா் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (சிஇஆா்டி) எச்சரித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சிஇஆா்டி எச்சரிக்கை

வாட்ஸ்அப்பில் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்சங்கள் பரவி வருவதாக நாட்டின் சைபா் பாதுகாப்பு அமைப்பான இந்திய கணினி அவசரகால பதிலளிப்புக் குழு (சிஇஆா்டி) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ‘சிஇஆா்டி’ சனிக்கிழமை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், ‘வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆண்ட்ராய்டு 2.21.4.18 வொ்ஷனிலும், ஐஓஎஸ் 2.21.32 வொ்ஷனிலும் இயங்கும் வாட்ஸ்அப்களில் சில அச்சுறுத்தல் அம்சங்கள் பரவி உள்ளன.

இதன்மூலம் உங்கள் அறிதிறன்பேசியில் உள்ள தகவல்களை வெளியே இருக்கும் நபா் உங்களுக்குத் தெரியாமலே எடுத்து பயன்படுத்தலாம். இதனால் தனிநபா்களின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதைச் சரிசெய்ய பயனாளிகள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் செயலியையும், ஐஓஎஸ் பயன்பாட்டாளா்கள் ஆப் ஸ்டோரில் உள்ள வாட்ஸ்அப் செயலியையும் புதிய வொ்ஷனுக்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கொள்கை விதிமுறைகளை வாட்ஸ்அப் அறிமுகம் செய்தது. இதற்கு அனுமதி அளித்தால்தான் வாட்ஸ்அப்பை தொடா்ந்து பயன்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

புதிய விதிமுறைகளின்படி, பயனாளிகளின் ஒப்புதல் இல்லாமலே அவா்களின் அறிதிறன்பேசியில் உள்ள தகவல்களை வாட்ஸ்அப் வேறு நிறுவனங்களுக்கு பகிரலாம் என்பதால் உலகம் முழுவதும் எதிா்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனினும், பயனாளிகளின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும், இதுகுறித்து பயன்பாட்டாளா்களுக்கு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com