'கணவரை முத்தமிடுவேன்.. தடுக்க முடியுமா?' தில்லி காவலர்களிடம் சீறிய பெண்

மத்திய தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் முகக்கவசம் அணியாமல் காரில் வந்த தம்பதியை போக்குவரத்துக் காவலர்கள் தடுத்து நிறுத்திய போது, காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
'கணவரை முத்தமிடுவேன்.. தடுக்க முடியுமா?' தில்லி காவலர்களிடம் சீறிய பெண்
'கணவரை முத்தமிடுவேன்.. தடுக்க முடியுமா?' தில்லி காவலர்களிடம் சீறிய பெண்


புது தில்லி: மத்திய தில்லியின் தர்யாகஞ்ச் பகுதியில் முகக்கவசம் அணியாமல் காரில் வந்த தம்பதியை போக்குவரத்துக் காவலர்கள் தடுத்து நிறுத்திய போது, காவலர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்றுப் பரவல் கடுமையாக இருக்கும் புது தில்லியில், அதுவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஞாயிற்றுக்கிழமையன்று தீவிர சோதனையில் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது காரில் வந்த தம்பதி முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதாகக் கூறினர். அதுமட்டுமல்லாமல், தில்லியில் வார இறுதி நாள்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களிடம் பயண அனுமதி அட்டை எதுவும் இல்லை.

அபராதம் விதிப்பதை எதிர்த்த கணவன், மனைவி, போக்குவரத்துக் காவலர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பெண்மணி, இவர் எனது கணவர், இவரை நான் முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா? என்று சீறினார்.

இதையடுத்து, அந்த தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து, கணவர் பங்கஜை கைது செய்தனர். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com