ஆக்ஸிஜன் வாங்க ரூ.1 கோடி: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூர் மருத்துவமனைகளில் அதிக அளவிலான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com