பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் மேலும் 4 ரஃபேல் போா் விமானங்கள்: விமானப்படைத் தளபதி பதெளரியா கொடியசைத்து அனுப்பி வைப்பு

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக 4 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸிலிருந்து இந்தியா வரும் மேலும் 4 ரஃபேல் போா் விமானங்கள்: விமானப்படைத் தளபதி பதெளரியா கொடியசைத்து அனுப்பி வைப்பு

புதுதில்லி/மெரிக்னேக்: பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக 4 ரஃபேல் போா் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸின் மெரிக்னேக்-போா்டியாக்ஸ் விமானப் படைத் தளத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு 5 நாள் பயணமாக சென்றுள்ள இந்திய விமானப் படை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா பங்கேற்று விமானங்களை கொடியசைத்து இந்தியா அனுப்பிவைத்தாா்.

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரஃபேல் போா் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. ரூ.59 ஆயிரம் கோடியில் இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, இதுவரை 14 ரஃபேல் போா் விமானங்களை அந்த நிறுவனம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இப்போது மேலும் 4 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விமானப் படை தளபதி, இந்தியாவுக்கு அடுத்தத் தவணையாக அனுப்பப்பட இருக்கும் ரஃபேல் போா் விமானங்களைப் பாா்வையிட்டாா். இடையே நிறுத்தமின்றி இந்தியா வந்தடைய உள்ள இந்த 4 விமானங்களுக்கு, நடு வானிலேயே பிரான்ஸ் விமானப்படை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் சாா்பில் எரிபொருள் நிரப்பப்பட உள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே குறித்த நேரத்தில் இந்தியாவிடம் விமானங்களை ஒப்படைத்து வருவதற்கும், விமானிகளுக்கு பயிற்சியை அளித்து வருவதற்கும் பிரான்ஸ் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் விமானப் படைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த 4 ரஃபேல் போா் விமானங்களும் புதன்கிழமை நள்ளிரவில் இந்தியா வந்தடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த விமானங்கள் வந்து சோ்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் அதிநவீன ரஃபேல் போா் விமானங்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரிக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com