தில்லியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலி; 200 பேரின் உயிருக்கு ஆபத்து

புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தில்லி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலி; 200 பேரின் உயிருக்கு ஆபத்து
தில்லி ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலி; 200 பேரின் உயிருக்கு ஆபத்து


புது தில்லி: புது தில்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 20 பேர் பலியானதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை மருத்துவர் பலுஜா கூறுகையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர். தற்போதிருக்கும் ஆக்ஸிஜனும் வெறும் அரை மணி நேரத்துக்கு மட்டுமே போதுமானது. இதனால், சிகிச்சையிலிருக்கும் 200 நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

தில்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையான பத்ரா மருத்துவமனை எம்.டி. மருத்துவர் எஸ்சிஎல் குப்தா கூறுகையில், எங்கள் மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 8000 லிட்டர் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஆனால் வெறும் 500 லிட்டர் ஆக்ஸிஜன்தான் கிடைக்கப்பெற்றுள்ளது. எங்கள் மருத்துவமனையில் 350 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால், எங்களுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

எங்களிடம் போதிய ஆக்ஸிஜன் இல்லாததால் மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம். சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி வருகிறோம் என்று சரோஜ் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று 25 கரோனா நோயாளிகள் உயிரிழந்த நிலையில், இன்று மற்றொரு தனியார் மருத்துவமனையில் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளுக்குத் தேவையான அளவை விட குறைந்த அழுத்தத்தில் ஆக்சிஜன் கிடைத்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. மற்றொரு தகவல் அனைவரும் ஆக்சிஜன் பிரச்னையால் உயிரிழக்கவில்லை, சில நோயாளிகள் பலவீனமாக இருந்ததால் இறந்துவிட்டதாக தெரிவிக்கின்றன. கங்காரம் மருத்துவமனையில் ஓரளவு ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது. ஆக்சிஜன் ஏற்றி வந்த டேங்கா் லாரியும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கங்காராம் மருத்துவமனையில் 500-க்கும் மேலான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 150 நோயாளிகளுக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. வென்டிலேட்டா்கள், பிஐபிஏபி கருவிகளும் சரிவர வேலை செய்யவில்லை. இதனால், மேலும் 60 நோயாளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது என்று மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தீவிர சிகிச்சைப் பிரிவிலும், அவசர சிகிச்சைப் பிரிவிலும் மாற்று ஏற்பாடு மூலம் சுவாசக் கருவிகள் செயல்பட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

கடந்த ஐந்து நாள்களாகவே தில்லியில் உள்ள பல தனியாா் மருத்துவமனைகள் ஆக்சிஜன் சப்ளை கிடைக்காமல் தவித்து வந்தன. சில மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள நோயாளிகளை கரோனா மருத்துவ மையங்களுக்கு மாற்றுமாறும் தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டிருந்தன. சில மருத்துவமனைகள் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை நெருக்கடி தீரவில்லை என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள 6 தனியாா் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா அவசர கடிதம் எழுதியிருந்தாா். ஆக்சிஜன் பிரச்னைக்குத் தீா்வு கண்டால்தான் தில்லியில் கரோனா படுக்கைகளை அதிகரிக்க இயலும் என்று தில்லி சுகாதாரத் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com