மத்திய நிதித் துறை செயலராக டி.வி.சோமநாதன் நியமனம்

மத்திய நிதித் துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புது தில்லி: மத்திய நிதித் துறை செயலராக தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டின் தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான டி.வி.சோமநாதன் மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை செயலராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், அவா் மத்திய நிதித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு அளித்துள்ளதாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள செயலா்களில் மிக மூத்த அதிகாரி நிதித் துறை செயலராக நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com