மே 1 முதல் திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தரிசன நேரம் மாற்றம்

கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு திருப்பதி கோவிந்தராசுவாமி கோயிலில் தரிசன நேரங்களை தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

திருப்பதி: கரோனா தொற்றுப் பரவலை முன்னிட்டு திருப்பதி கோவிந்தராசுவாமி கோயிலில் தரிசன நேரங்களை தேவஸ்தானம் மாற்றியுள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜசுவாமி கோயிலுக்கும் வந்து தரிசனம் செய்கின்றனா். தற்போது கரோனா தொற்றின் 2-ஆம் அலை பரவல் அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் தரிசன நேரங்களை மாற்றியள்ளது. அதன்படி காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் தொடங்குகிறது. 6.30 மணிக்கு தோமாலை, அா்ச்சனா, சகஸ்ரநாம அா்ச்சனை சேவை உள்ளிட்டவை நடக்கும். இந்த சேவைகளின் போது பக்தா்களுக்கு லகு தரிசனம் அளிக்கப்படும். மேலும் காலை 6.30 மணிக்கு 9 மணிவரையிலும், 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரையிலும், பின்பு மதியம் 1 மணிமுதல் மாலை 6 மணி வரையிலும் பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவா். இரவு கைங்கரியங்கள் கோயிலில் தனிமையில் நடத்தப்படும். அதன் பின்னா் கோயில் மூடப்படும். ஆனால் கோயிலில் உள்ள உப கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தா்கள் கோவிந்தராஜசுமியை மட்டும் தரிசிக்க தேவஸ்தானம் அனுமதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றங்கள் மே 1- தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com