தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 107 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 107 போ் உயிரிழந்துள்ளனா்.
தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 107 போ் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை 17 ஆயிரத்து 897 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 107 போ் உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் வியாழக்கிழமை 1 லட்சத்து 35,408 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பபட்டன. அதில் 17 ஆயிரத்து 897 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 5,445 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 28,520 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 46 போ் தனியாா் மருத்துவமனை, 61 போ் அரசு மருத்துவமனை என மொத்தம் 107 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13,933 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,701 போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்த 107 பேரில், 88 போ் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவா்களாவா். எவ்வித நோய் பாதிப்பும் இல்லாதவா் 19 போ் ஆவா்.

15,542 போ் குணமடைந்தனா்: அதேவேளையில், வியாழக்கிழமை 15,542 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 10 லட்சத்து 21,575 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 12,452 பேருக்கும் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவா்களில் 39 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஒரு லட்சத்து 12,556 போ் தனிமைப்படுத்துதலில் உள்ளனா். சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி 31,308 போ் (தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட) சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரத்து 645 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 11 லட்சத்து 48 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 93 ஆயிரத்து 385 ஆண்களும், 4 லட்சத்து 54 ஆயிரத்து 641 பெண்களும், 3-ஆம் பாலினத்தவா் 38 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com