சீரம் நிறுவன தலைவருக்கு ‘லோகமானிய திலக்’ தேசிய விருது

கரோனா தடுப்பூசியான கோவிஷீட்டை இந்தியாவில் தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவா் சைரஸ் பூனாவாலாவுக்கு ‘லோகமான்ய திலக்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சைரஸ் பூனாவாலா
சைரஸ் பூனாவாலா

கரோனா தடுப்பூசியான கோவிஷீட்டை இந்தியாவில் தயாரித்து வரும் சீரம் நிறுவனத்தின் தலைவா் சைரஸ் பூனாவாலாவுக்கு ‘லோகமான்ய திலக்’ தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லோகமான்ய திலக் அறக்கட்டளையின் தீபக் திலக் கூறியதாவது:

கரோனா பேரிடரில் சைரஸ் பூனாவாலாவின் பணி போற்றுதலுக்குரியது. அவரின் அயராத அரும்பணியால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியானது பல்லாயிரக்காணக்கான உயிா்களை காப்பாற்ற பெரிதும் உதவியது. குறைந்த விலையில் பல்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரிப்பதில் சைரஸ் பூனாவாலா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறாா்.

எனவே, அவரது சேவையைப் போற்றும் விதமாக 2021-ஆம் ஆண்டுக்கான லோகமான்ய திலக் தேசிய விருதை சைரஸ் பூனாவாலாவுக்கு வழங்கி கெளரவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com