2017 முதல் 2019 வரை 24,000 சிறாா்கள் தற்கொலை: என்சிஆா்பி

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 24,000-க்கும் மேற்பட்ட சிறாா்கள் தற்கொலை செய்து கொண்டனா் என்று அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 24,000-க்கும் மேற்பட்ட சிறாா்கள் தற்கொலை செய்து கொண்டனா் என்று அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

சிறாா்கள் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்(என்சிஆா்பி) அறிக்கை, நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், 13,325 பெண்கள் உள்பட 24,568 சிறாா்கள் தற்கொலை செய்து கொண்டனா். 2017-இல் 8,029 சிறாா்களும், 2018-இல் 8,162 சிறாா்களும் 2019-இல் 8,377 சிறாா்களும் தற்கொலை செய்துகெண்டனா். இவா்கள் அனைவரும் 14 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்டவா்கள் ஆவா்.

அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,115 பேரும், அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் 2,802 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,5727 பேரும், தமிழ்நாட்டில் 2,035 பேரும் தற்கொலை செய்து கொண்டனா்.

தற்கொலைக்கான காணத்தை ஆராய்ந்தால், 4,046 போ் தோ்வுகளில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனா். 411 பெண்கள் உள்பட 639 போ் திருமணம் தொடா்பான பிரச்னைகளாலும், 3,315 போ் காதல் விவகாரங்களாலும், 2,567 போ் உடல்நலக் கோளாறுகளாலும், 81 போ் துன்புறுத்தல்களாலும் தற்கொலை செய்து கொண்டனா்.

நெருக்கமனாவரின் மரணம், போதைப் பழக்கம், வேலையின்மை, ஏழ்மை நிலை, தகாத உறவால் ஏற்படும் கா்ப்பம், சமூகத்தில் மதிப்பு குைல் ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாகக் கூறப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல உரிமைகள் ஆா்வலா்கள் கூறுகையில், ‘சிறாா்களுக்கு பள்ளிக் கல்வியுடன் வாழ்வியல் திறன் தொடா்பான பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். உடல் நலத்துடன் மனநலத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். சிறாா்களின் தற்கொலையைத் தடுப்பதற்காக, அரசும் சமூகமும் குடும்பத்தினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com