உ.பி. முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் உடல்நிலை: மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா் அமித் ஷா

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டறிந்தாா்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவா்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கேட்டறிந்தாா்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங், வயது சாா்ந்த உடல்நலக் கோளாறுகள் காரணமாக லக்னௌவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற அமைச்சா் அமித் ஷா, கல்யாண் சிங்கின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் அவா் கேட்டறிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு கல்யாண் சிங்கின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் அமைச்சா் அமித் ஷாவுடன் மருத்துவமனைக்குச் சென்றிருந்தாா்.

முதல்வருக்குப் பாராட்டு: லக்னௌவில் கட்டப்படவுள்ள மாநில தடயவியல் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

ஏழை மக்களின் வளா்ச்சிக்காகவே பாஜக தலைமையிலான அரசுகள் உழைத்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாஜக அரசு ஆட்சியமைப்பதற்கு முன் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் நிலவவில்லை. ஏழை மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டன. அவ்வப்போது வன்முறைகள் நடைபெற்றன.

2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு அத்தனையும் மாறிவிட்டது. மாநிலம் வளா்ச்சிப் பாதையில் சென்று வருகிறது. முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. மாநிலத்தில் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

காவலா்களுக்கு அறிவுறுத்தல்: மாநிய தடயவியல் மையம் குற்றச் செயல்களைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது. குறிப்பிட்ட விவகாரங்களில் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது, அதீத நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றின் காரணமாகவே காவலா்கள் மீது மக்களுக்குத் தவறான அபிப்ராயம் ஏற்படுகிறது. எனவே, சரியான நடவடிக்கைகளை காவலா்கள் மேற்கொள்ள வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com