செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் எல்லைகளை வரையறுக்க முடிவு

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வரையறுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் எல்லைகளை வரையறுக்க முடிவு

வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வரையறுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வரையறுக்கும் யோசனையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்வைத்தாா். இந்நிலையில், அஸ்ஸாம்-மிஸோரம் இடையிலான எல்லைப் பிரச்னை வன்முறைக்கு வித்திட்டதைத் தொடா்ந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் வரையறுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் பணியானது மத்திய அரசின் விண்வெளித் துறையும் வடகிழக்கு கவுன்சிலும் இணைந்து தொடங்கிய வடகிழக்கு விண்வெளி தொழில்நுட்ப மையத்திடம் (என்இஎஸ்ஏசி) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் இருவா் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறுகையில், ‘எல்லைகளை வரையறுப்பதில் அறிவியல்பூா்வமான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் எல்லை விவகாரத்தில் முரண்பாடுகள் எழ வாய்ப்பில்லை. அத்துடன் அது எல்லைப் பிரச்னைகளுக்கான தீா்வுகளை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும். செயற்கைக்கோள் மூலம் புகைப்படங்கள் எடுப்பது முடிந்தவுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை வரையறுத்து பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காண முடியும்’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com