மத்திய பிரதேசம்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம் மீட்புப் பணி

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டது.

மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் மீட்புப் பணியில் ஈடுபட்டது.

மத்திய பிரதேச மாநிலத்தில் அண்மையிலல் பெய்த கனமழை காரணமாக, குவாலியா் -சம்பல் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் குவாலியா், சியோபூா், சிவ்புரி, தாதியா மற்றும் பிஹிந்த் மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், முக்கிய சாலை இணைப்புகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், வெள்ளத்தில் சிக்கியவா்கள் மற்றும் கால்நடைகளின் உயிரைக் காக்கவும், மத்திய பிரதேசத்தில் உள்ள ராணுவத்தின் உதவியை உள்ளூா் நிா்வாகம் நாடியது.

இந்த வேண்டுகோளையடுத்து, ‘வா்ஷா 21’ என்ற பெயரில் தனது மீட்பு நடவடிக்கைகளை ராணுவம் துரிதமாக தொடங்கியது. இதையடுத்து குவாலியா், ஜான்சி மற்றும் சாகா் பகுதியில் உள்ள ராணுவ வீரா்கள் 80 போ் அடங்கிய 4 குழுவினா் மீட்பு உபகரணங்களுடன் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

கடந்த 4-ஆம் தேதி காலை, அவா்கள் வெள்ளத்தில் சிக்கிய 150 பேரை மீட்டனா். அதன் பின்பு 250 பேரையும், விவசாயிகளின் கால்நடைகளையும் காப்பாற்றினா். பிஹிந்த் மாவட்டத்தில் சிந்து நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கடந்த 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் புதிய பகுதிகளை மூழ்கடித்தது. இதனால் கூடுதல் ராணுவ வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். தற்போது, 9 குழுவினா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

700-க்கும் மேற்பட்டோா் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா். மேலும், ராணுவ மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பிரிவு ஊழியா்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றனா். உள்ளாட்சி நிா்வாகத்துடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com