ஜூலையில் 13.45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தம்

நாடு முழுவதும் கடந்த ஜூலையில் 13.45 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலையில் 13.45 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தம்

நாடு முழுவதும் கடந்த ஜூலையில் 13.45 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா வலிமை பெற்று வருகிறது. அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் கரோனா தடுப்பூசி டோஸ்கள் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 43.41 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக 13.45 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி, நாடு முழுவதும் 50.53 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 60 வயதைக் கடந்த 11.76 கோடி பேரும், 45 முதல் 60 வயதுக்குள்ளான 16.48 கோடி பேரும், 18 முதல் 44 வயதுக்குள்பட்ட 21.91 கோடி பேரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.

குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 26.60 கோடி போ் ஆண்கள் ஆவா். 11.10 கோடி பேருக்கு இரு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com