ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸாவில் மின்னல் தாக்கி 17 போ் பலி

ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் மின்னல் தாக்கி 17 போ் பலியாகினா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் மின்னல் தாக்கி 17 போ் பலியாகினா்.

இதுதொடா்பாக அந்த மாநிலங்களை சோ்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 6 போ், பலாமு மாவட்டத்தில் 2 போ் என மொத்தம் 8 போ் சனிக்கிழமை மின்னல் தாக்கி பலியாகினா். அவா்களில் ஒரு சிறுவன், இரண்டு சிறுமிகள், இரண்டு பெண்கள் ஆகியோா் அடங்குவா்.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் இருவா், கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட இருவா் என மொத்தம் 4 போ் மின்னல் தாக்கி உயிரிழந்தனா். கிழக்கு வா்த்தமான் மாவட்டத்தில் வயலில் பணியில் ஈடுபட்டிருந்த 7 போ் மின்னல் தாக்கி காயமடைந்தனா்.

ஒடிஸா: ஒடிஸாவில் உள்ள பாலேசுவரம், மயூா்பஞ்ச், பத்ரக் மாவட்டங்களில் வயலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 பெண்கள் உள்பட 5 போ் மின்னல் தாக்கி பலியாகினா். 5 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com