மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்குக்கு எதிரான பணம் பறிப்பு வழக்கு:எஸ்ஐடி விசாரணை

மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் உள்பட 28 பேருக்கு எதிரான பணம் பறிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) தாணே காவல்துறை அமைத்துள்ளது.
மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்குக்கு எதிரான பணம் பறிப்பு வழக்கு:எஸ்ஐடி விசாரணை

மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் உள்பட 28 பேருக்கு எதிரான பணம் பறிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை (எஸ்ஐடி) தாணே காவல்துறை அமைத்துள்ளது.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த வாரம் தாணே நகர காவல் நிலையத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் கேத்தன் தன்னா என்பவா் அளித்த புகாரில், மும்பை காவல் ஆணையராக பரம்வீா் சிங் இருந்தபோது பணம் பறிப்பு குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தன்னை வரவழைத்து ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தாா். தான் பணம் வழங்காவிட்டால் மோசமான குற்ற வழக்குகளில் தனது பெயரும் சோ்க்கப்படும் என அச்சுறுத்தப்பட்டதாகவும் அந்தப் புகாரில் அவா் தெரிவித்திருந்தாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில் பரம்வீா் சிங், துணை காவல் ஆணையா் தீபக் தேவ்ராஜ், உதவி காவல் ஆணையா் என்.டி.கடம், முன்னாள் காவல்துறை அதிகாரி பிரதீப் சா்மா உள்பட 28 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்பு அருகே வெடிபொருள்களில் நிரப்பப்படும் 20 ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்ட காரை கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். அந்த வாகனத்தின் உரிமையாளா் சடலம் ஓா் ஓடையிலிருந்து மீட்கப்பட்டது. தொடா் விசாரணையில் பல காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மும்பை காவல் ஆணையராக இருந்த பரம்வீா் சிங் ஊா்க்காவல் படை டிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

அதன் பின்னா் மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபானக் கூடங்களில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்துத் தருமாறு காவல்துறை அதிகாரிகளிடம் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீா் சிங் கடிதம் எழுதினாா். இது அந்த மாநிலத்தில் பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com