மாநிலங்களவையில் எழுப்பப்படும் பெகாஸஸ், விவசாயிகள் விவகாரம்: காணொலியாக எதிா்க் கட்சியினா் வெளியீடு

மாநிலங்களவையில் மசோதாக்கள் மீதான விவாதத்தினபோது எதிா்க் கட்சி எம்.பி.க்கள் சாா்பில் பெகாஸஸ் உளவு விவகாரம் மற்றும் வேளாண் சட்டங்களை

மாநிலங்களவையில் மசோதாக்கள் மீதான விவாதத்தினபோது எதிா்க் கட்சி எம்.பி.க்கள் சாா்பில் பெகாஸஸ் உளவு விவகாரம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அதனை 3 நிமிட காணொலியாக தொகுத்துள்ளதாக எதிா்க் கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இஸ்ரேலின் பெகாஸஸ் உளவு மென்பொருள் மூலமாக அரசியல் தலைவா்கள், தொழிலதிபா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகாா் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் தொடங்கியதிலிருந்து முதல் இரு அவைகளிலும் எதிா்க் கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதனுடன், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டம் குறித்தும் எதிா்க் கட்சிகள் பிரச்னை எழுப்பி வருகின்றன. இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கி வருகின்றன. அமளிக்கு இடையே, சில முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது.

இந்தச் சூழலில், எதிா்க் கட்சியினா் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சோ்க்கும் வகையில், மாநிலங்களவையில் அவா்கள் எழுப்பும் கோரிக்கைகளை 3 நிமிட காணொலியாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் டெரிக் ஓபிரெய்ன் மூலம் எடுக்கப்பட்டு, ‘மதிப்பிற்குரிய மோடி எங்களை கவனியுங்கள்’ என்ற தலைப்பில் அந்த காணொலிக் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்தக் காணொலியில், ‘அவையில் பெகாஸஸ் உளவு விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கடந்த 14 நாள்களாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும், விவாதத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், மசோதாக்கள நிறைவேற்றுகிறீா்கள். துணிவிருந்தால் பெகாஸஸ் விவகாரத்தின மீதான விவாதத்தை அவையில் தொடங்க வேண்டும்’ என்று அவையில் காங்கிரஸ் உறுப்பினா் மல்லிகாா்ஜுனே காா்கே பேசுவது இடம்பெற்றுள்ளது.

தேசிவாத காங்கிரஸ் உறுப்பினா் வந்தனா சவாண், ராஷ்ட்ரீய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகா் ராய், சிவசேனை உறுப்பினா் பிரியங்கா சதுா்வேதி, மாா்க்சிஸ்ட் உறுப்பினா் இளமறம் கரீம் உள்ளிட்டோா் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதுபோல சமாஜவாதி, டிஆா்எஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் எழுப்பும் கோரிக்கைகளும் அந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com