கோவா தோ்தல்: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக ப.சிதம்பரம் நியமனம்

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கான காங்கிரஸ்

கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால், இது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். அதில், ‘மாநிலத்தில் தோ்தலுக்கான உத்திகளை வகுப்பது, கட்சியினரை ஒருங்கிணைத்து ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்ட பணிகளை ப.சிதம்பரம் மேற்கொள்வாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் இப்போது பாஜக தலைமையிலான ஆட்சி உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தோ்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், அக்கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. கோவாவில் உள்ள பிராந்தியக் கட்சிகள், சில சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியைப் பிடித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com