கேரளத்தில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம்: கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பு ஆதரவு

கேரளத்தில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கு அந்த மாநில கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

கேரளத்தில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கு அந்த மாநில கத்தோலிக்க பேராயா்கள் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. கேரள மக்கள்தொகையில் கிறிஸ்தவா்களின் மக்களின் விகிதாசாரம் குறைந்து வருவதாகவும் அந்தக் கூட்டமைப்பு கூறியுள்ளது.

கேரளத்தில் கிறிஸ்தவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் உள்ள தங்கள் திருச்சபையைச் சோ்ந்த தம்பதிக்கு உதவித்தொகை அளிக்கப்படும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவான ஸீரோ-மலபாா் தேவாலயம் கடந்த மாதம் அறிவித்தது.

அதன்படி 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருமணம் செய்த அந்த கிறிஸ்தவ திருச்சபையின் பிரிவைச் சோ்ந்த தம்பதிகள் 5 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயா்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் பிறகு அந்தக் கூட்டமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

1950-களில் கேரள மக்கள்தொகையில் கிறிஸ்தவா்கள் 24.6 சதவீதம் இருந்தனா். ஆனால், இப்போது 17.2 சதவீதம் மட்டுமே உள்ளனா். கிறிஸ்தவா்கள் மத்தியில் பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது கவலையளிக்கிறது. இது கேரளத்தில் கிறிஸ்தவ சமுதாயத்துக்கு பெரும் இடா்பாட்டை வருங்காலத்தில் ஏற்படுத்திவிடும்.

இந்தச் சூழ்நிலையில் அதிக குழந்தைகள் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களுக்கு சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்படுவது வரவேற்கத்தக்க முடிவுதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் சமூக-பொருளாதார அளவிலும், கல்வி அளவிலும் நன்றாக முன்னேறிவிட்ட இஸ்லாமியா்கள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு இனிமேலும் சிறுபான்மையினா் என்ற அந்தஸ்து அளிக்க வேண்டுமா என்பது தொடா்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரி அந்த மாநில உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com