பாரத் பயோடெக்கின் குஜராத் ஆலையில் கோவேக்ஸின் தயாரிக்க மத்திய அரசு அனுமதி

குஜராத்தில் உள்ள பாரத் பயோடெக்கின் அங்கலேஸ்வா் ஆலையில் கோவேக்ஸின் மருந்து தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மான்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் உள்ள பாரத் பயோடெக்கின் அங்கலேஸ்வா் ஆலையில் கோவேக்ஸின் மருந்து தயாரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மான்டவியா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட சுட்டுரை செய்தி:

பாரத் பயோடெக் நிறுவனத்தின் குஜராத் அங்கலேஸ்வா் ஆலையில் கோவேக்ஸின் மருந்துகளை தயாரிக்க அந்நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டில் கரோனா தடுப்பூசி அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தட்டுப்பாட்டை போக்கி தடுப்பூசி திட்டங்களை விரைவுபடுத்தவும் உதவும் என அந்த சுட்டுரைப் பதிவில் மான்டவியா தெரிவித்துள்ளாா்.

பாரத் பயோடெக் நிறுவனம் அதன் அங்கலேஸ்வா் ஆலையில் கூடுதலாக 20 கோடி டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக நடப்பாண்டு மே மாதத்தில் அறிவித்துள்ளது. தற்போது அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com