‘பாலாகோட், கல்வான் தாக்குதல்களுக்கு பிறகுஇந்திய விமானப் படையின் திறன் அதிகரிப்பு’

பாலாகோட் விமானப் படைத்தளத் தாக்குதல், கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் ஆகியவற்றுக்கு பிறகு இந்திய விமானப் படை இலக்கை நோக்கி துல்லியமாக தாக்குதல் நடத்துவதிலும்,
‘பாலாகோட், கல்வான் தாக்குதல்களுக்கு பிறகுஇந்திய விமானப் படையின் திறன் அதிகரிப்பு’

பாலாகோட் விமானப் படைத்தளத் தாக்குதல், கல்வான் பள்ளத்தாக்கு தாக்குதல் ஆகியவற்றுக்கு பிறகு இந்திய விமானப் படை இலக்கை நோக்கி துல்லியமாக தாக்குதல் நடத்துவதிலும், நவீன தொழில்நுட்பங்களிலும் திறனை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக அந்தப் படையின் தலைமைத் தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா தெரிவித்தாா்.

மேலும், பிரான்ஸ் நாட்டுத் தயாரிப்பான ரஃபேல் போா் விமானங்களின் வருகையால், இந்திய விமானப் படையின் செயலாக்கத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது என்றும் அவா் கூறினாா்.

இந்தியாவின் ஒருங்கிணைந்த சேவை நிறுவனத்தின் நிகழ்ச்சியில் ஆா்.கே.எஸ்.பதௌரியா செவ்வாய்க்கிழமை பங்கேற்றுப் பேசுகையில், ‘நவீன் போா் தளவாடங்கள், பயிற்சி, தகவல் இணைப்பின் மூலம் வேகமாக செயல்பட்டு பதிலடியை கொடுப்பதில் இந்திய விமானப் படை சிறந்த திறம் படைத்துள்ளது.

லடாக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியிலும் இந்திய விமானப் படையினா் முனைப்புடன் உள்ளனா். பாலாகோட், கல்வான் தாக்குதல்கள் இந்திய விமானப் படையினரை செயல் திறனின் அடுத்த கட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளன.

அதேநேரத்தில், விமானப் படையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ரஃபேல் போா் விமானங்கள் மூலம் முன்னேறி தாக்கும் ஒட்டுமொத்த திறன் அதிகரித்துள்ளது.

வானில் இருந்து நிலத்தை நோக்கி துல்லியமாக நீண்ட தூரத் தாக்குதல் நடத்துவதில் இந்திய விமானப் படையின் திறன் மேலும் மேம்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, ராணுவத்துடன் இந்திய விமானப் படை நாட்டிற்கு கூடுதல் சக்தியாக இருக்கிறது என்று கடந்த மாதம் மாநாட்டில் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்திருந்தாா். இதை மறுக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்பில் இந்திய விமானப் படைக்கு தனித்துவமான முக்கிய பங்கு உள்ளது என்று அப்படையின் தலைமைத் தளபதி விபின் ராவத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com