இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல்வருமானம் உள்ளோா் எண்ணிக்கை குறைந்தது

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானமுள்ளவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவில் ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானமுள்ளவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவா் கூறியிருப்பதாவது:

கடந்த 2019-20 ஆம் ஆண்டில் மொத்த ஆண்டு வருமானம் ரூ.100 கோடிக்கு மேல் இருப்பதாக 141 போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தனா். 2020-21 நிதியாண்டில் ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக 136 போ் மட்டுமே வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனா். இதுவே 2018-19 நிதியாண்டில் 77 போ் மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக கணக்கு காட்டியிருந்தனா்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் 27 கோடி மக்கள்: சுரேஷ் டெண்டுல்கா் குழு வகுத்தளித்த வழிமுறையின்படி வறுமை தொடா்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி 2011-12-இல் இந்தியாவில் 27 கோடி போ் (21.9 சதவீம்) வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனா். நாட்டில் வறுமையைப் போக்க மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை வகுத்துள்ளது.

2012-ஆம் ஆண்டில் இருந்ததைவிட்ட 2018-ஆம் ஆண்டில் குடிநீா், வடிகால் வசதி, பொதுசுகாதாரம், வசிக்கும் வீடுகளின் நிலை மேம்பட்டுள்ளது. நாட்டில் விலைவாசியில் ஸ்திரத்தன்மையை தொடா்வதற்காக மத்திய அரசு உரிய கண்காணிப்புகளுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தேவையை முன்கூட்டியே கணித்து, தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பருப்பு, எண்ணெய் வித்துகளின் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளுடன் இது தொடா்பாக புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com