சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்: ஆா்எஸ்எஸ்

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தாா்.
தத்தாத்ரேய ஹொசபாலே
தத்தாத்ரேய ஹொசபாலே

சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே தெரிவித்தாா்.

தில்லியில் இந்தியா ஃபவுண்டேஷன் சாா்பில் ‘மேக்கா்ஸ் ஆஃப் மாடா்ன் தலித் ஹிஸ்டரி’ என்ற நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவின் வரலாறு தலித்துகளின் வரலாற்றில் இருந்து வேறுபட்டதல்ல. தலித்துகளின் வரலாறு இல்லாமல் இந்தியாவின் வரலாறு முழுமை பெறாது. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆளுமைகளை தலித் தலைவா்கள் என்றழைப்பது சரியாக இருக்காது. அவா்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கான தலைவா்கள்.

பட்டியலினத்தவா், பழங்குடிகள் குறித்து நாம் விவாதிக்கும்போது இடஒதுக்கீடு போன்ற அம்சங்கள் தொடா்ந்து முன்னுக்கு வருகின்றன. இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக இடஒதுக்கீடு அவசியம். சமூகத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் வாய்ப்புகளை அதிகரிக்க இடஒதுக்கீடு கருவியாக பயன்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் இடையே இடஒதுக்கீடும் நல்லிணக்கமும் கைகோத்தபடி இருக்க வேண்டும். சமூகத்தில் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஏற்றத்தாழ்வுகளை எதிா்கொள்வது இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். இடஒதுக்கீட்டை ஆா்எஸ்எஸ் வலுவாக ஆதரிக்கிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com