சுத்தமான நகரமாக விளங்கும் இந்தூருக்கு மற்றுமொரு மகுடம்

இந்தியாவின் முதல் உபரி நீர் நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவின் முதல் உபரி நீர் நகரமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மையான நகரமாக விளங்கிவரும் இந்தூருக்கு மற்றுமொரு மகுடம் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் வர்த்தக தலைநகரான இந்தூர், நாட்டின் முதல் உபரி நீர் நகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ட்விட்டர் பக்கத்தில், "தூய்மை பாரத திட்டத்தின் கீன் நாட்டின் முதல் உபரி நீர் நகரமாக இந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அந்நகர மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். தூய்மையை நோக்கிய பயணத்தில் இந்தூரின் உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஒட்டு மொத்த நாட்டிற்கும் எடுத்துக்காட்டு. மாநிலத்திற்கு பெருமை சேர்ப்பதை இந்தூர் தொடரட்டும்" என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இந்தூர் மாவட்ட ஆட்சியர் மணிஷ் சிங் கூறுகையில், "ஸ்வச் சர்வேக்சான் வழிகாட்டுதலின்படி, 25 சிறிய மற்றும் பெரிய நீர்நிலைகளில் 1,746 பொது மற்றும் 5,624 உள்ளூர் கழிவுநீர் வெளியேற்றங்களில் குழாய் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம், கன் மற்றும் சரஸ்வதி ஆறுகள் சுத்தப்படுத்தப்படுகிறது" என்றார்.

நகரில் ஏழு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுவதாகவும் இந்தூர் மாநகர ஆணையர் பிரதிபா பால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள நகரங்களில் சுத்தம், சுகாதாரம், துப்புரவு பணிகள் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்து ஆண்டுக்கு ஒரு முறை ஸ்வச் சர்வேக்சான் என்ற பெயரில் கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com