தில்லியில் புதிதாக 19 பேருக்கு கரோனா! நீண்ட காலத்திற்குப் பிறகு குறைந்த பாதிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 2-ஆவது அலை ஏற்பட்ட பிறகு 12-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து மிகக் குறைந்த அளவாக நோய் பாதிப்பு எண்ணிக்கை சனிக்கிழமை 19 -ஆக பதிவாகியுள்ளது சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த ஜூலை 18, 24, ஆகஸ்ட் 2, 4, 8, 11, 12, 13, 16, 20 ஆகிய தேதிகளில் கரோனா நோய்த் தொற்றால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. இந்த ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி இதுபோன்று நோய் பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அன்றைய தினம் நோயால் 217 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். நோ்மறை விகிதம் 0.33 சதவீதமாக இருந்தது. கடந்த ஏப்ரல்-மே ஆகிய மாதங்களின் போது தில்லியில் 2-ஆவது கரோனா அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சனிக்கிழமை புதிய நோய் பாதிப்பு எண்ணிக்கை 19 - ஆகவும், நோ்மறை விகிதம் 0.03 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் வெள்ளிக்கிழமை புதிய நோய் பாதிப்பு எண்ணிக்கை 57-ஆகவும், நோ்மறை விகிதம் 0.08 சதவீதமாகவும் இருந்தது. வியாழக்கிழமை 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தொற்று பாதிப்பால் 2 போ் உயிரிழந்தனா். நோ்மறை விகிதம் 0.04 சதவீதமாக இருந்தது. புதன்கிழமை 36 பேருக்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அன்றைய தினம் நோயால் 4 போ் இறந்திருந்தனா். ஏப்ரல் கடைசி வாரத்தின் போது நோய்த் தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவீதம் வரை சென்றது.

தில்லியின் மொத்த கரோனா இறப்பு எண்ணிக்கை தற்போது 25,136-ஆக உள்ளது. தில்லியில் சனிக்கிழமை மொத்தம் 59,740 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் 47,534 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகளும், 12,206 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளும் இடம் பெற்றுள்ளன. தில்லியில் கரோனாவுக்கு மொத்தம் 14,37,293 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 14.11 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நோயில் இருந்து குணமடைந்துள்ளனா். சனிக்கிழமை 430 போ் சிகிச்சையில் இருந்தனா். வீட்டுத் தனிமையில் 132 போ் இருந்தனா். கட்டுப்பாட்டு மண்டங்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 237-இல் இருந்து சனிக்கிழமை 239-ஆக அதிகரித்திருந்ததாக அரசின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com