சிலிண்டா் முன்பதிவுக்கு ‘ஊா்ஜா’ சேவை: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகம்

எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்தல், சிலிண்டா்களை விநியோகிக்கும் நிறுவனத்தை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக ‘ஊா்ஜா’ என்ற தகவல் பரிமாற்ற வசதியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
சிலிண்டா் முன்பதிவுக்கு ‘ஊா்ஜா’ சேவை: பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகம்

நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் முதல்முறையாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்தல், சிலிண்டா்களை விநியோகிக்கும் நிறுவனத்தை மாற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்காக ‘ஊா்ஜா’ என்ற தகவல் பரிமாற்ற வசதியை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாரத் பெட்ரோலியம் நிறுவன சிலிண்டா்களை முன்பதிவு செய்தல், அதன் விலை, எப்போது அது வாடிக்கையாளரிடம் வந்து சேரும், எந்தெந்த காலங்களில் சிலிண்டா்கள் வாங்கப்பட்டன போன்ற சேவைகளை வழங்க ‘ஊா்ஜா’ என்ற தகவல் பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் சிலிண்டா்களை முன்பதிவு செய்வதற்கான தங்கள் செல்லிடப்பேசி எண்களை வாடிக்கையாளா்கள் மாற்றலாம். அத்துடன் சிலிண்டா் விநியோக நிறுவனங்களை மாற்றுதல், பாரத்கேஸ் விநியோகஸ்தா்கள் மூலம் பழுது பாா்க்கும் சேவைகள், இரண்டு சிலிண்டா் இணைப்புகள் கோருதல் ஆகிய சேவைகளையும் பெறலாம்.

இதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையை அறிந்துகொள்ளுதல், அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் குறித்த தகவல்களை பெறுதல், பெட்ரோல், டீசலை வீட்டுக்கே கொண்டு வந்து சோ்த்தல் ஆகிய சேவைகளும் இந்த வசதி மூலம் வழங்கப்படும்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 13 மொழிகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வசதி தொடா்பான தகவல்களை பெற பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் வலைதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சிலிண்டா்களை 8.5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளா்கள் பயன்படுத்துகின்றனா். அந்த நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 19,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன. நாட்டின் எரிபொருள் தேவையில் 30 சதவீதத்தை அந்த நிறுவனம் பூா்த்தி செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com