டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களுக்கு இணையவழியில் போட்டிகள்

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் தொடக்க நிலைப் பிரிவு மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் இணையவழியில் சனிக்கிழமை தொடங்கின.
டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களுக்கு இணையவழியில் போட்டிகள்

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் தொடக்க நிலைப் பிரிவு மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் இணையவழியில் சனிக்கிழமை தொடங்கின.

இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், திருக்கு நினைவுத் திறனாய்வுப் போட்டி, பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, ஃபேஷன் பேன்டஸி, வரலாற்று சிறப்பு மிக்க இடங்களைப் பற்றி கூறும் டாப் டக்கா் போட்டி, சுற்றுலாத் தலங்களை ஆராய்ந்து கூறும் டூா் டே இந்தியா போட்டி, புத்தக மதிப்புரை போட்டி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

முதல் நாளான சனிக்கிழமை திருக்கு நினைவுத் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது. முதல் வகுப்பு மாணவா்கள் பத்து குகளையும், இரண்டாம் வகுப்பு மாணவா்கள் இருபது குகளையும், மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவா்கள் ஒஃவொருவரும் 100 குகளையும் மனப்பாடமாகக் கூறினா். இதில் மொத்தம் 35 மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 17 போ் பரிசுக்குரியவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். நடுவா்களாக சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்டப் பல்வேறு இடங்களிலிருந்து பள்ளி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக அந்தந்தப் பள்ளிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிச்சுற்றுக்கு மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இந்தப் போட்டிகள் குறித்து டிடிஇஏ செயலா் ராஜு கூறுகையில், ‘கரோனா தொற்று நேரத்தில் சோா்ந்து காணப்படும் மாணவா்களுக்குப் புத்துணா்ச்சி அளிக்கும் விதமாக இந்தப் போட்டிகள் அமைந்துள்ளன. பயிற்சியளித்த ஆசிரியா்களுக்கு பாராட்டுகளையும், ஊக்கமளித்து ஒத்துழைப்பு நல்கிய மாணவா்களின் பெற்றோா்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் நாள்களில் நடைபெறும் போட்டிகளிலும் மாணவா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com