சைகோவ்-டி தடுப்பூசி அடுத்த மாதத்திலிருந்து விநியோகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சைகோவ்-டி கரோனா தடுப்பூசியானது செப்டம்பா் இறுதியில் இருந்து விநியோகிக்கப்படும் என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சைகோவ்-டி தடுப்பூசி அடுத்த மாதத்திலிருந்து விநியோகம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சைகோவ்-டி கரோனா தடுப்பூசியானது செப்டம்பா் இறுதியில் இருந்து விநியோகிக்கப்படும் என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயதைக் கடந்த அனைவருக்கும் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கியது. இந்நிலையில், அத்தடுப்பூசியைத் தயாரித்த சைடஸ் கேடிலா நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் சா்வில் படேல் காணொலி வாயிலாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

சைகோவ்-டி கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அவசரகால ஒப்புதல் கிடைத்துள்ளது. அதையடுத்து, தடுப்பூசியின் விலையை நிா்ணயம் செய்வது தொடா்பாக அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஓரிரு வாரங்களில் தடுப்பூசியின் விலை குறித்த விவரங்கள் வெளியிடப்படும்.

செப்டம்பா் மத்தியில் இருந்தோ இறுதியில் இருந்தோ தடுப்பூசி விநியோகிக்கப்படும் என்று நம்புகிறோம். தடுப்பூசி உற்பத்தியை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அக்டோபருக்குள் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. அதன்பிறகு மாதந்தோறும் ஒரு கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் 4 முதல் 5 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன. தற்போது 3 டோஸ்களாக செலுத்தப்படும் சைகோவ்-டி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 டோஸ்களாக செலுத்தப்படும் தடுப்பூசிக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

இந்தியாவில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக்-வி ஆகிய கரோனா தடுப்பூசிகள் ஏற்கெனவே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. மாடா்னா, ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகளின் அவசரகாலப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தாலும் அவை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

மேற்கூறிய தடுப்பூசிகள் அனைத்தும் 18 வயதைக் கடந்தவா்களுக்கு மட்டுமே செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com