நாட்டின் 58% கரோனா பாதிப்பு கேரளத்தில் பதிவு: சுகாதாரத்துறை

நாட்டில் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 58.4 சதவிகிதம் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயளாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பு
மத்திய சுகாதாரத்துறையின் செய்தியாளர்கள் சந்திப்பு

நாட்டில் கடந்த வாரத்தில் பதிவான மொத்த பாதிப்பில் 58.4 சதவிகிதம் கேரளத்தில் மட்டும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் பரவல் குறைந்து வரும் நிலையில், மகாராஷ்டிரம் மற்றும் கேரளம் மாநிலங்களில் மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜேஷ் பூஷண் கூறியது:

"கரோனா இரண்டாம் அலையானது, கடந்த மே 7ஆம் தேதி உச்சத்தில் இருந்தபோது 4.14 லட்சம் ஒருநாள் பாதிப்பு பதிவாகின. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 46,164 பேருக்கு மட்டுமே பாதிப்பு கண்டறியப்பட்டன. மேலும், கடந்த ஒரு வார மொத்த பாதிப்பில் கேரளத்தில் மட்டும் 58.4 சதவிகிதம் பதிவாகியுள்ளன.

அதேபோல், ஜூன் 1ஆம் தேதி 279 மாவட்டங்களில் 100 பேருக்கு மேல் கரோனா கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 41 மாவட்டங்களில் மட்டுமே 100 பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், 41 மாவட்டத்தில் மட்டுமே பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளன.

தற்போது நாடு முழுவதும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,70,829 (51.19%) பேர் கேரளம், 16.01% பேர் மகாராஷ்டிரம், 5.8% கர்நாடகம், 5.5% தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், தொடர்ந்து எட்டாவது வாரமாக பாதிப்பு விகிதம் 3 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து காணப்படுகிறது. இந்த மாதம் தடுப்பூசி செலுத்தும் சராசரியானது 52.16 லட்சமாக உள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து 400க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களை அனைவரையும் விமான நிலையம் மற்றும் ரானுவ விமான தளங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை செய்துள்ளோம்.

ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் போலியோ பாதிப்புள்ளதால், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு போலியோ தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com