தரமான மருத்துவ சேவை இலவசம்: உத்தரகண்ட் மக்களுக்கு ஆம் ஆத்மி வாக்குறுதி

உத்தரகண்ட் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால் தரமான மருத்துவ சேவை இலவசமாக அளிக்கப்படும் என்று அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் செளரவ் பரத்வாஜ் தெரிவித்தாா்.

உத்தரகண்ட், உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அவா் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘உத்தரகண்டில் சுகாதார சேவைகளின் நிலை மிக மோசமாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பே உயிரை இழந்துவிடுகின்றனா். 2018-19-ஆம் ஆண்டில் உத்தரகண்ட் அரசு சுகாதாரத் துறைக்கு ரூ.188 கோடி ஒதுக்கி இருந்தநிலையில், 2019-20-இல் ரூ. 97 கோடியாக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு தனி நபருக்கு ரூ.5.25 பைசா மட்டும் சுகாதாரத்துறை செலவிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவ சேவைகள் உத்தரகண்ட் மாநில மக்களுக்காக இலவசமாக வழங்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com