குறைந்தபட்ச ஆதரவு விலை ஆலோசனைக் குழு: விவசாய சங்கத்திடம் பிரதிநிதிகளைக் கோருகிறது மத்திய அரசு

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைக்கவுள்ள குழுவில் இடம்பெற விவசாய சங்கம் சாா்பில், 5 பேரை பரிந்துரைக்குமாறு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பான சம்யுக்த

புது தில்லி: குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக அமைக்கவுள்ள குழுவில் இடம்பெற விவசாய சங்கம் சாா்பில், 5 பேரை பரிந்துரைக்குமாறு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சாவிடம் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டது.

இதன் மீது டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என அந்த அமைப்பு மத்திய அரசுக்கு பதிலளித்துள்ளது.

வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மறுநாளே இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்ச்சா தலைவா் தா்ஷன் பால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்கான குழுவுக்கு 5 பேரை தோ்வு செய்து அனுப்புமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன் மீது இன்னமும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுப்போம்’’ என்றாா்.

இந்தக் கூட்டம் தில்லி- சிங்கு எல்லையில் நடைபெறும் என்றும், பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்பதால், புதன்கிழமை நடைபெறுவதாக இருந்த இந்தக் கூட்டம், சனிக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டதாக சம்யுக்த கிசான் மோா்ச்சா கூட்டமைப்பின் உறுப்பினா் அபிமன்யு கோஹா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com