வரதட்சணை தடை சட்டத்தால், வரதட்சணை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

வரதட்சணை தடை சட்டத்தால், வரதட்சணை தொடர்பான வழக்குகள் குறைந்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: தேசிய குற்ற ஆவணக்  காப்பகத் தகவல் படி, வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டில் 12,826 வழக்குகளும், 2019ம் ஆண்டில் 13,307 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 10,366 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கடந்த 3 ஆண்டுகளில், வரதட்சணை  மரணங்கள்  தொடர்பாக முறையே 7167, 7141 மற்றும் 6966 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் குற்றங்கள் குறைந்து வருவதை தரவுகள் காட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com