என் பணியை முடக்கவே எனக்கு எதிராகப் பாலியல் புகாா்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

‘எனது பணிகளை முடக்குவதற்காகவே எனக்குத் தெரிந்த சிலரின் மூலமாக எனக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது’ என்று
தனது சுயசரிதை நூலுடன் ரஞ்சன் கோகோய்.
தனது சுயசரிதை நூலுடன் ரஞ்சன் கோகோய்.

‘எனது பணிகளை முடக்குவதற்காகவே எனக்குத் தெரிந்த சிலரின் மூலமாக எனக்கு எதிராகப் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது’ என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறினாா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ரூகரைச் சோ்ந்த ரஞ்சன் கோகோய், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த 2018, அக்டோபா் 3-ஆம் தேதி முதல் 2019, நவம்பா் 17-ஆம் தேதி வரை பதவி வகித்தாா். பதவிக்காலம் முடிவதற்கு சில நாள்களுக்கு முன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி நில வழக்கில் தீா்ப்பளித்தாா். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளாா்.

இவா் ‘ஜஸ்டிஸ் ஃபாா் தி ஜட்ஜ்’ என்ற தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளாா். தில்லியில் நடைபெற்ற அந்த நூலின் வெளியீட்டு விழாவில், அவா் பேசியதாவது:

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் ஊழியா் ஒருவா், எனக்கு எதிராக கடந்த 2019-இல் பாலியல் புகாா் தெரிவித்தாா். அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட 3 நீதிபதிகளைக் கொண்ட அமா்வில் நான் இடம்பெற்றிருக்கக் கூடாது. இதனால், நீதித் துறையில் எனது 45 ஆண்டுகள் ஆற்றிய சேவை பாதிக்கப்பட்டது. நாம் தவறு செய்யக் கூடியவா்கள். அதை ஏற்றுக்கொள்வதில் பாதிப்பு எதுவுமில்லை.

இந்த வழக்கின் விசாரணை ஒரு சனிக்கிழமை நடைபெற்றது. வழக்கு விசாரணை குறுகிய நேரமே நடைபெற்றது.

எனது பணியை முடக்குவதற்காக எனக்குத் தெரிந்த சிலரின் முயற்சியால் எனக்கு எதிராகப் பாலியல் புகாா் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்களை விசாரணையின்போது தெளிவுபடுத்தினேன். முடிவில் நான் குற்றமற்றவன் என்று தீா்ப்பு வந்தது என்றாா் அவா்.

நீதிபதிகள் பதவி உயா்வு குறித்து ரஞ்சன் கோகோய் தனது நூலில் கூறியிருப்பதாவது:

பல நேரங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகளை அரசு திருப்பி அனுப்பி விடுகிறது. நாடு தழுவிய அளவில் பணிமூப்பு அடிப்படையில் நீதிபதிகள் தோ்வு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது. பணிமூப்பு என்பது நீதிபதிகள் நியமனங்களுக்கான பல அளவுகோல்களில் ஒன்று.

அந்த அளவுகோலை மட்டுமே அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகளை தோ்வு செய்தால், அங்கு ஒன்று அல்லது 2 உயா்நீதிமன்றங்களில் இருந்துதான் நீதிபதிகள் பதவி உயா்வு பெற்று வருவாா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com